About Me

My photo
ஓடுபவைகளை பிடிக்க நடந்து கொண்டிருப்பவன்

Tuesday, July 22, 2008

பழங்கதை - ஹஜியின் சியாம் (பேங்காக்) பயணம்

ஹஜி கப்பல் மூலமாக பினாங் (மலேசியா) வழியாக நாகபட்டினத்திலிருந்து சியாம் பயணமாகிறார். அங்கே குலாமின் மரணத்திற்கு பிறகு பல நாட்களாக மூடியிருந்த கடையை திறக்கிறார். அவர் மனதிற்குள் எண்ண ஓட்டங்கள். இந்த கடையையே புரட்டி போட வேண்டும் என்று. 'நாகூர் ஸ்டோர்ஸ்' என்று பெயரிடப்பட்டு புதுப் பொலிவு பெறுகிறது அந்த கடை. சிறுக சிறுக சேர்த்து கடையை ஒரு நிலைக்கு கொண்டு வருகிறார். வியாபாரம் சூடு பிடிக்கிறது, அவரது வாழ்க்கையிலும்

Saturday, July 12, 2008

பழங்கதை சுருக்கம் - 2

பெரிய செல்வந்தரும் வியாபாரியுமான குலாம் பாதியிலேயே வுட்டுட்டு போன வியாபாரம் ஹஜியின் கைகளுக்கு வந்தது. ஹஜியோ தையல் கடை வைச்சு துணி தச்சு கொடுத்து வவுத்து பசிய ரெண்டு வேலை மட்டும் ஓட்டிக் கொண்டும் ஒரு வேலை காய்ஞ்சுக் கொண்டும் இருந்தவர். இவருக்கு வெளிநாட்டுக் கெல்லாம் போய் பொழைப்பு நடத்த வேண்டிய நிர்பந்தம். அவருக்கு 3 கொழந்தைங்க. தங்கச்சி புள்ளைங்க வேற. தவிர, குலாமின் 6 புள்ளைகளும் இருக்கு. எல்லாத்தையும் கட்டி காக்கணும். இவரோ தனி மரம். தனி மரம் தோப்பாகாது தான், ஆனா இங்கே ஒரு தனி மரம் தான் தோப்பையே கட்டி காத்தது.