குலாம் என்பவர் மிகச் சிறந்த வியாபாரி. நாகூர் முஸ்லீம்களுக்கு மிகவும் பிரசித்தமான ஊர். சொந்த ஊரான குன்னூரிலிருந்து வியாபார நிமித்தமாக நாகூர் வந்த குலாம் அந்த ஊரின் அப்போதைய அமைதியின் பால் ஈர்க்கப்பட்டு நாகூரிலேயே தங்க முடிவு செய்தார். அவரின் வியாபாரம் அயல் நாட்டையும் அடைந்தது.
தாய்லாந்த் தலைநகரம் பேங்கோக் அப்போது சியாம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஊரில் வியாபரத்தை தொடங்கிய அவர் வாரிசையும் உருவாக்க எண்ணினார். யாயி என்ற ஒரு சியாம் நாட்டு பெண்ணை மணந்தார். வரிசையாக (4 ஆண்கள் + 2 பெண்கள்) 6 பிள்ளைகள். அனைவரையும் கூட்டிக் கொண்டு நாகூர் வந்தார்.
தனது வாழ்க்கை முடிவுக்கு வருவதை உணர்ந்த அவர் அப்போது அந்த முடிவை எடுக்கிறார். தனது வியாபாரம், பிள்ளைகள் யாவற்றையும் தனது உறவினரான ஹஜியிடம் அமானிதமாக ஒப்படைக்கிறார்.
இனி இந்த கதை எழுத்து வழக்கிலல்லாமல் பேச்சு வழக்குலேயே தொடரும்
தொடரும்
About Me
Blog Archive
Monday, May 19, 2008
Thursday, May 15, 2008
புனித மக்கா நகரில் ஒரு நாள்
அனைவருக்கும் அமைதி நிலவட்டுமாக.. தலைப்பை பார்த்து விட்டு இது பெருமானார் சம்மந்தப்பட்ட ஹதீஸ் பற்றியது என்று நினைத்து கொள்ளாதீர்கள்..
ஒரு நாள் அந்த பெண்மணி புனித மக்கா நகரில் ஹ்ஜ் பயண கிரியைகளை செய்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இஸ்மாயீல் நபி சம்மந்தப்பட்ட இடத்தை காட்டப்பட்டது. அவர்கள் இஸ்மாயீல் நபியின் நினைவாக இருக்கும் போது தான் அந்த செய்தி சொல்லப்பட்டது.
'உங்க மருமஹ் சூலியா இருக்காஹலாம்.."
அப்போதே சொன்னார்கள் ஆச்சிமா என்று எங்களால் அழைக்கப்படும் அந்த பெண்மணி, "பொறக்குற கொழந்தைக்கு இஸ்மாயீல்ன்னு தான் பேரு வக்கணும்" என்று
ஆச்சிமாவின் மாப்பிள்ளை காலமாகி விட்டதால் அவர்களின் நினைவாக முஹம்மது தம்பி என்ற அவர்களின் பெயரை விடலாம் என்று எண்ணியிருந்த அந்த குழந்தைக்கு முஹம்மது இஸ்மாயில் என்று பெயரிடப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)